[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

mk-stalin-birthday-wish-to-anbazhagan

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தனது 94 வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவருக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘கழகத்தினருக்கு கொள்கை வகுப்பெடுக்கும் பேராசிரியர். தலைவர் கருணாநிதியின் அரசியல் பயணத்தில் என்றென்றும் தோள் கொடுத்து துணை நிற்கும் தோழர். எமக்கு ஊக்கமளித்து ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் வழங்கும் நல்லாசான். இரு வண்ணக் கொடியும், பகுத்தறிவு - சுயமரியாதை கொள்கைகளும் காலத்தால் அழியாத செல்வங்கள் என்பதை உணர்ந்து இலட்சிய வாழ்வு வாழும் பெருந்தகை. நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தை 94 வயதிலும் கட்டிக்காக்கும் உறுதி மிக்க உள்ளம். முதுமையை வயதுக்கு மட்டும் அளித்துவிட்டு, சிந்தனையில் எப்போதும் இளமையாகவும் வலிமையாகவும் இருக்கும் பேராசிரியர் நூறாண்டு கடந்தும் நலமுடன் வாழ்ந்து கழகத்திற்கும் தலைவர் கருணாநிதிக்கும் என்றென்றும் துணை நிற்க வணங்குகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Anbazhagan dmk mkstalin
Advertisement:
Advertisement:
[X] Close