[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாமக்கல்லில் 17 வயது சிறுமி கொலை?... சகோதரர் கைது

17-year-old-girl-killed-in-namakkal-brother-arrested

நாமக்கல்லில் 17 வயது பெண்ணை அடித்துக் கொன்று, உடலை எரித்ததாக அவரது சகோதரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏ.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற சிறுமிக்கு கடந்தாண்டு லாரி ஓட்டுநர் சுரேஷ்குமார் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இது தொடர்பான புகாரையடுத்து அவரை மீட்ட மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் ஐஸ்வர்யாவை காப்பகத்தில் சேர்த்தனர். சிறுமியை படிக்க வைப்பதாக உறுதியளித்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர், அவரை கணவர் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, 17 வயதான ஐஸ்வர்யா மீண்டும் கடந்த 14ஆம் தேதி குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்பு கொண்டு தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மீண்டும் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட ஐஸ்வர்யாவை, அவரது தந்தை தற்கொலைக்கு முயன்றதாக கூறி 15ஆம் தேதி உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஐஸ்வர்யாவை அவரது குடும்பத்தினர் அடித்துக் கொலை செய்து விட்டதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை தங்கராஜ், தாய் ராஜம்மாள் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஐஸ்வர்யாவை அடித்து கொன்ற குற்றச்சாட்டில் அவரது சகோதரர் சுபாஷ் சந்துருவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close