[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய இதுவரை ஆன மொத்த செலவு ரூ.477 கோடி...!

vardah-storm-damage-caused-cost-of-rs-477-crore

வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு முதல்கட்டமாக 500 கோடியை ஒதுக்கிய நிலையில், எந்தெந்த துறைகளுக்கு இதுவரை எவ்வளவு செலவாகியிருக்கிறது என்ற விவரத்தைப் பார்க்கலாம்.

வர்தா புயலால் விழுந்த மின்கட்டமைப்புகள், மின்மாற்றிகள் மற்றும் மின்சார கம்பங்களை சீரமைக்க தமிழக மின்சார வாரியத்துக்கு 350 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. மரங்களை வெட்டி அகற்றவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், துப்புரவு மற்றும் குளோரின் பவுடர் தூவவும் மொத்தம் 75 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட சாலைகள், பொதுக் கட்டடங்களை சரிசெய்ய நெடுஞ்சாலைத் துறைக்கு 25 கோடி ரூபாயும், பொதுப் பணித் துறைக்கு 7 கோடி ரூபாயும் செலவாகியிருக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வர்தா பாதிப்புகளை தற்காலிகமாக சீரமைக்க 10 கோடி ரூபாயும், மீனவர்களுக்கு நிவாரண உதவியாக 10 கோடி ரூபாயும் செலவாகியுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மொத்தமாக 477 கோடி ரூபாய் புயல் சீரமைப்புப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close