[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

தண்டவாளத்தில் சேதம்.... அரக்கோணம் - சென்ட்ரல் இடையே ரயில்சேவை பாதிப்பு

damage-on-track-so-arakkonam-central-train-cancelled

சென்னை கொரட்டூர் அருகே மின்சார ரயில் செல்லும் தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதால் அரக்கோணம் - சென்ட்ரல் வழித்தடத்தில் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் கொரட்டூர் ரயில் நிலையத்தில் புறப்படுவதற்கு மின்சார ரயில் தயாராக இருந்தது‌. இந்நிலையில் ரயில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டதை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்ததையடுத்து ரயில் உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டது. ரயில்வே சுரங்கப்பாதைக்கு குழி தோண்டியதால் சேதம் ஏற்பட்டதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். தண்டவாளத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 2 மணி நேரம் தாமதமாக மின்சார ரயில்கள் சென்ட்ரல் நிலையத்துக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close