[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

நாமக்கல்லில் 15 வயது சிறுமி எரித்துக் கொலை?... பெற்றோரிடம் போலீஸ் விசாரணை

15-year-old-girl-killed-and-buried-police-investigating-to-parents

நாமக்கல்லில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த 15 வயது சிறுமியை பெற்றோர் எரித்துக் கொன்றதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.வாளவந்தி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரா‌ன ராஜாம்மாள் என்பவரின் 15 வயது சிறுமி‌க்கு கடந்த ஆண்டு, பொட்டனம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் குமாருக்கு குழந்தை‌த் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தை மீட்பு அதிகாரிகள், சிறுமியை‌ மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் வைத்திருந்தனர்.

பின்னர் சிறுமியை படிக்க வைப்பதாக உறுதியளித்து வீட்டிற்கு கூட்டிச் சென்ற பெற்றோர், கணவர் வீட்டிற்கே சிறுமியை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து மீண்டும் சிறுமியை குழந்தைகள் நலக் காப்பகத்திற்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர்‌. இந்த நிலையில், கடந்த வாரம் சிறுமியை பெற்றோர் மீண்டும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், நேற்று அந்த சிறுமி திடீரென உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து, சிறுமியை பெற்றோரே எரித்து‌ள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close