[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வர்தா புயல் பாதிப்பு... போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்

varta-storm-damage-relief-work-on-a-war-footing

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

சென்னையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டையில் அமைச்சர் வேலுமணி பார்வையிட்டார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையில் எடுக்கப்பட்டிருக்கும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார். வர்தா புயல் பாதிக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை, சென்னையில் மட்டும் சுமார் 40 ஆயிரம் டன் மரம் மற்றும் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக கூறினார். சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், புயலில் விழுந்த மரங்களுக்கு கூடுதலாக புதிய மரங்கள் நடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close