[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

குப்பைத் தொட்டியில் ஒரு கோடி மதிப்புள்ள கிழிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள்..!

being-torn-the-rs-1-000-notes-in-trash

திருச்சியின் உறையூர் கடைவீதியில் 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டு குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்டம், உறையூர் கடைவீதியில் அரசு ஊழியர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள குப்பைத்தொட்டி ஒன்றில் துண்டுதுண்டாக கிழிக்கப்பட்ட நிலையில் 1000 ரூபாய் நோட்டுகள் கொட்டப்பட்டுள்ளது. இன்று காலை அந்த வழியாக சென்ற மக்கள் இதனை கண்டு அங்கு கூடினர். துண்டுதுண்டாக கிழிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அரசின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களே இதை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக திருச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close