[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

'வங்கக் கடலில் 125 ஆண்டில் 500 புயல்கள்'...!

500-storms-created-with-in-125-years-in-bay-of-bengal

வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடந்த 125 ஆண்டுகளில் ஏறத்தாழ 500 புயல்கள் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரிஷா மாநிலத்தை சேர்ந்த கடலியல் துறை பேராசிரியர் உமா சரண் மொகந்தி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

பசிஃபிக் கடலில் உருவாகும் புயல்களை விட வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்களின் வீரியம் குறைவாகவே இருந்து வருவதாக தெரிவித்துள்ள அவர், எனினும் பசிஃபிக் கடல் புயல்களை விட வங்கக் கடல் புயல்கள் அதிக உயிரிழப்புகளையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் ஆண்டுக்கு 80 முதல் 90 புயல்கள் உருவாவதாகவும் இதில் 6 முதல் 7 புயல்கள் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் ஏற்படுவதாகவும் உமா சரண் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close