[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

கருணாநிதி நலமுடன் உள்ளார்: ஸ்டாலின் தகவல்

stalin-said-karunanidhi-health-is-well

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அண்ணாவின் 108-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கடந்த மாதம் 5,6,12,13 ஆகிய தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கவிதை ஒப்பித்தல், கட்டுரை போட்டிகள் ஆகியவை திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மாநில அளவிலான இறுதி போட்டி நாமக்கல்லில் நேற்று தொடங்கியது. நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ10,000, ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.5000 ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், மாணவ சமுதாயத்தை நம்பிதான் இந்த நாடு உள்ளது என குறிப்பிட்ட ஸ்டாலின் டாக்டர் அப்துல் கலாம் சொன்னது போல் கணவு காணுங்கள் நிச்சியமாக உங்களால் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார். மாணவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என ஊக்கப்படுத்தி மு.க.ஸ்டாலின் பேசினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close