[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

கருணாநிதியை சந்திக்க வைகோவுக்கு மறுப்பு

dmk-supporters-not-allowed-vaiko

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க வந்த வைகோவை மருத்துவமனை உள்ளே விட திமுகவினர் மறுத்துவிட்டனர்.

காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க ஏராளமான அரசியல் தலைவர்கள் இன்று மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.இந்நிலையில் கருணாநிதியை சந்திக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது ஆதரவாளர்களுடன் வந்தார். மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த திமுக தொண்டர்கள் வைகோவின் வாகனத்தை சூழ்ந்து கொண்டு மருத்துவமனை உள்ளே விட மறுத்துவிட்டனர். இதனையடுத்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்காமல் வைகோ தனது ஆதரவாளர்களுடன் திரும்பி சென்றுவிட்டார்.இருந்த போதிலும் சில தொண்டர்கள் அவருடைய வாகனத்தின் மீது கற்கள்,காலணிகளை வீசினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Dmk karunanidhi vaiko வைகோ
Advertisement:
Advertisement:
[X] Close