[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

அதிமுக சார்பில் கருணாநிதியை நலம் விசாரித்தார் தம்பிதுரை

admk-thambidurai-asks-health-condition-of-dmk-chief-karunanidhi

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை அதிமுக சார்பிலும் அதிமுகவுக்கு தலைமை ஏற்க இருக்கிற சசிகலா சார்பிலும் நலம் விசாரித்ததாக அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் தம்பி துரை தெரிவித்தார்.

தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக எம்.பி.யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையும், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும் காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, அதிமுக சார்பிலும் அதிமுகவுக்கு தலைமை ஏற்க இருக்கிற சசிகலா சார்பிலும் கருணாநிதியை நலம் விசாரிக்க வந்ததாகவும், அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துவதாகவும் கூறினார். மேலும் கருணாநிதி நலமாக உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்ததாகவும் தம்பிதுரை கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close