[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

கருணாநிதியை நேரில் சந்திக்க வர வேண்டாம்... திமுக வேண்டுகோள்

avoid-coming-in-person-to-meet-karunanidh

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்திக்க வர வேண்டாம் என அக்கட்சித் தலைமைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கருணாநிதிக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டிரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆகையால், கருணாநிதியை நேரில் சந்திக்க வராமல் கழகத் தோழர்களும், நண்பர்களும் ஒத்துழைக்க வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close