[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

விரைவில் நலம் பெறுவார் கருணாநிதி : ராகுல்காந்தி பேட்டி

karunanidhi-gets-better-rahul-gandhi

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்புவார் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டெல்லியிலிருந்து விமானம் மூலம் காலை 11.15 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து நேராக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு ராகுல் காந்தி காரில் சென்றார். அங்கு திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் பிரிவுக்குச் சென்ற ராகுல் காந்தி, கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். திமுக பொருளாளர் ஸ்டாலின், மாநிலங்களவை எம்.பி. கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதி விரைவில் நலம் பெற சோனியா காந்தி வாழ்த்துத் தெரிவித்ததாகக் கூறினார்.

பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல்காந்தி, கருணாநிதியை நேரில் சந்தித்து பேசியதாகவும், அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக மக்களின் தலைவர் கருணாநிதி என குறிப்பிட்ட ராகுல்காந்தி, அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், திக் விஜய் சிங் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close