[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

மரக்கழிவுகளை சாலையில் கொட்ட வேண்டாம்.. சென்னை மாநகராட்சி அறிவுரை

dont-spill-wood-waste-on-road-chennai-corporation

சென்னையில் குடியிருப்பு, வணிக வளாகங்கள், கல்லூரி வளாகங்களில் இருக்கும் மரக் கழிவுகளை சாலையில் கொட்ட வேண்டாம் என பெருநகர மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

வர்தா புயலினால், குடியிருப்பு, வணிக வளாகங்கள், கல்லூரி வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் முறிந்து விழுந்த மரக்கிளைகள் உள்ளிட்ட கழிவுகள் சாலையோரங்களில் கொட்டப்படுவதால், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இத்தகைய கழிவுகளை கொட்டுவதற்கு அண்ணாநகர், தேனாம்பேட்டை, அடையாறு உள்ளிட்ட 54 இடங்களில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டள்ளது.

சாலை மற்றும் பொது இடங்களில் விழுந்த மரங்களை அகற்றும் பணியாளர்களுக்கு கட்டணமோ, பணமோ அளிக்கத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்க விரும்பினால் 1913 என்ற எண்ணிலும், 044-2561 9206, 2561 9511, 2538 4965 என்ற மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களிலும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close