[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்படுகிறது: காவேரி மருத்துவமனை அறிக்கை

karunanithi-getting-speedy-recovery

திமுக தலைவர் கருணாநிதிக்கு மூச்சுத்திணறலுக்காக ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்றிரவு திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை குறித்து, இன்று பிற்பகலில் இரண்டாவது அறிக்கையை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது அதில், மூச்சுத்திணறலுக்காக கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, உடல்நலக் குறைவால் கடந்த 1-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, 7-ம் தேதி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close