[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

அதிமுக பொதுக்குழு எப்போது கூடுகிறது?.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

admk-general-council-meeting-date-announced-today

அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமாக பதவி வகித்து வந்த ஜெயலலிதா, மறைவுக்கு பின்னர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும், முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் போயஸ் கார்டனில் கூடி, கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளனர். இந்த கூட்டத்திற்குப் பின்னர், பொதுக்குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வரும் 24-ம் தேதி அல்லது 26-ம் தேதி பொதுக்குழு கூடுவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close