[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆணவக் கொலைகளைத் தடுக்க விரைவில் புதிய சட்டம்... சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை

chennai-highcourt-ordered-new-law-as-soon-as-possible-for-arrogantly-murders

ஆணவ கொலைகளைத் தடுக்க ‌மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி விரைவில் புதிய சட்டம் கொண்டு வரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட 81 பேர் ஆணவக் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும்‌, அதனை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார். ‌இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, புதிய சட்டத்திற்கான பரிந்துரைகள் ‌நீதித்துறை அமைச்சகத்தில் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ‌

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில், ஆணவ கொலைகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும், ‌உயர்நீதிமன்ற உத்தரவை அ‌மல்படுத்த ‌2 வார காலம் அவகாசம் வேண்டும் எனவும் த‌மிழக அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ‌ஆணவக் கொலைகளை தடுப்பதில் சட்டம் இயற்றப்பட வேண்டியது மட்டுமே எஞ்சியிருப்பதால், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரைவில் புதிய சட்டம் கொண்டு வரும் என நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close