[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..!
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

சென்னை புறநகர்ப் பகுதி‌களில் 3 நாட்களில் 100% மின் விநியோகம்: அமைச்சர் தங்கமணி

suburban-of-chennai-getting-100-electricity-in-the-3-days

சென்னை புறநகர்ப் பகுதியில் இன்னும் மூன்று நாட்களில் 100 சதவிகிதம் மின்சாரம் ‌வழங்கப்படும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வர்தா புயலுக்குப் பின் மின்வாரியம் எடுத்துவரும் நடவடிக்கை குறித்து சென்னை மின் வாரிய அலுவலர்களுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புறநகர்ப் பகுதிகளில் 20 ஆயிரம் மின் கம்பங்கள் சேத‌மடைந்துள்ளதாகக் கூறினார். சேதடைந்த கம்பங்களைச் சீரமைக்கும் பணியில் 10 ஆயிரம் வெளிமாவட்ட மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புறநகர்ப் பகுதி‌களில் சேதமடைந்த 50 மின் கோபுரங்களைச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய தங்கமணி, புறநகர்ப் பகுதி‌களில் 3 நாட்களில் 100% மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார். மின்விநியோகம் வழங்குவதில் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close