[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

வஞ்சித்தது வடகிழக்கு பருவமழை... தண்ணீர்த் தட்டுப்பாட்டை நோக்கி தமிழகம்

dam-water-level-decrease-in-tamilnadu

அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் போதிய மழை பெய்யாவிட்டால் தமிழகம் வரும் கோடை காலத்தில் கடும் வறட்சியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மேட்டூர் உள்ளிட்ட 20 முக்கிய நீர் நிலைகளில் நீர் இருப்பு ‌மிகவும் குறைவாக உள்ளது. இவற்றில் 3 அணைகளில் மட்டுமே 30 சதவிகிதத்திற்கு மேல் நீர் இருப்பு உள்ளது. 9 அணைகளில் 15 சதவிகிதத்திற்கும் குறைவான தண்ணீரே இருப்பு உள்ளது. சென்னை மாநகரின் முக்கிய நீராதாரமாகத் திகழும் செம்பரம்பாக்கம் ஏரியில் 18 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணகிரி அணையில் மட்டுமே 50 சதவிகிதத்திற்கு அதிகமான நீர் அதாவது 58% நீர் உள்ளது.

வர்தா புயல் ஓரளவு மழையை தந்திருந்தாலும் அது பற்றாக்குறை அளவை 66 சதவிகிதத்தில் இருந்து 61 சதவிகிதமாக குறைக்க மட்டுமே உதவியுள்ளது. வழக்கமாக, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் டிசம்பர் 2ஆவது வார முடிவில் 40 சென்டிமீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 16 சென்டி மீட்டர் மட்டுமே பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் அடுத்து வரும் கோடைகாலம் மக்களுக்கும் அரசிற்கும் சவாலான ஒன்றாகவே இருக்கும் எனத் தெரிகிறது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close