[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

வர்தா புயலால் சுமார் 7,000 கோடி இழப்பு... நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க அசோசெம் கோரிக்கை

vardha-cyclone-assocham-demand-industries-to-help

வர்தா புயலால் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க அசோசெம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தொழில் துறை அமைப்பான அசோசெம்மின் செயலாளர் ராவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணித்திருப்பதாக கூறியுள்ளார். எனவே, நிறுவனங்கள், தங்களின் சமூகப் பொறுப்புக்கான பிரிவின் மூலம், குறிப்பிட்ட தொகையை புயல் நிவாரணப் பணிகளுக்கு செலவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, படுக்கை, போர்வை, தார்ப்பாய் மற்றும் குடிநீர் சுத்திகரிப்புக் கருவி, மருந்துகள் ஆகியவற்றை வழங்க முன்வருமாறும் ராவத் கேட்டுக்கொண்டுள்ளார். மீனவர்கள், பயிர்ச் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிறுவனங்கள் தாராள உதவி செய்ய முன்வருமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் பொருளாதாரத்தில் 10 சதவிகித பங்கு வகிக்கும் சுற்றுலா, இந்த வர்தா புயலால் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்றும் ராவத் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close