[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

வர்தா புயல் நிவாரணப் பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு

tn-cm-announces-rs-500-cr-for-vardah-cyclone-restoration-works

வர்தா புயல் நிவாரணப்பணிகளுக்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

புயல் சேதங்களை சீர் செய்யும் பணிகள் குறித்து தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கு பின், முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் வர்தா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை மற்றும் உடனடி உள்கட்டமைப்பு சீரமைப்புப்பணிகளுக்கு என 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழக மின்சார வாரியத்திற்கு 350 கோடி ரூபாயும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 75 கோடி ரூபாய், மீனவர்களுக்கான நிவாரணத்தொகைக்காக 10 கோடி ரூபாய், நெடுஞ்சாலைத்துறைக்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிவாரணப்பணிகளுக்காக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா 10 கோடி ரூபாய், அரசு கட்டடங்களை சீர் செய்ய பொதுப்பணித்துறைக்கு 7 கோடி ரூபாய், நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதாரத்துறைக்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

பால் பண்ணை சேதங்களை சீர் செய்ய 50 லட்சம் ரூபாய், போக்குவரத்து சிக்னல்களை சீர் செய்ய காவல்துறைக்கு 5 கோடி ரூபாய், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய், பேருந்துகள், பேருந்து பணிமனை கட்டடங்கள் மற்றும் பேருந்து முனையங்களில் தற்காலிக சீரமைப்புப்பணிகளுக்காக போக்குவரத்துத்துறைக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close