வர்தா புயலின் கோரத்தாண்டவத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பல வருட பழைமையான மரங்கள் வேரொடு சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் காணப்படுகின்றன.
மேலும் சென்னையின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் வண்டலூர் பூங்காவிலுள்ள பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் விழுந்துள்ளன. தற்போது வண்டலூர் பூங்கா வெறிச்சோடிக் கிடக்கிறது,
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார். மரங்கள் விழுந்துள்ளதால், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பூங்கா அதிகாரிகள் முதலமைச்சருக்கு விளக்கினர். இதனையடுத்து முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பூங்காவை சீர் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகளுக்காக பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆய்வின் போது, அரசுத் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!
சென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா ?
ஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை ! #Topnews
மக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது