[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

மின்விநியோகம் முழுமையாக வழங்கப்படாததன் காரணம் என்ன..?!

electricity-is-still-not-fully-re-established

வர்தா புயலால் மின் கம்பங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதால் மின் விநியோகம் இன்னும் முழுமையாக சீராகவில்லை. பலத்த காற்றில் உயர் மின்கோபுரங்கள் சாய்ந்ததே அதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

வர்தா புயலால் சென்னையில் சாய்ந்துள்ள பத்தாயிரம் மின்கம்பங்கள், சேதமடைந்துள்ள 450 மின்மாற்றிகளை சரிசெய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் சீரடைந்துள்ளது. குறிப்பாக, சென்னை ஈக்காட்டுத்தாங்கல், பரங்கிமலை, கோடம்பாக்கத்தில் சில பகுதிகளில் மின் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது. அசோக்நகர், ராமசாமி சாலை, பி.டி.ராஜன் சாலை, ஆவடியின் சில பகுதிகளிலும், மயிலாப்பூர், ராயப்பேட்டை, அபிராமபுரம், எம்.ஆர்.சி நகர், மந்தைவெளியின் சில பகுதிகளிலும் மின் விநியோகம் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல், மேடவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கருகம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், பெசன்ட் நகர், அம்பத்தூர், அண்ணாநகரின் சில பகுதிகளிலும் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது. எனினும் சென்னையில் பல இடங்களிலும் அதன் சுற்று‌ வட்டாரப் பகுதிகளிலும் இன்னும் மின் விநியோகம் தொ‌டங்கப்படவில்லை.

4 துணை மின் நிலையங்களும் 14 உயர் மின்னழுத்த கோபுரங்களும் சேதமடைந்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சூறாவளிக்காற்று காரணமாக மணலி, தண்டையார் பேட்டை, ம‌யிலாப்பூர், தரமணி ஆகிய 4 இடங்களில் ‌உள்ள 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில் உள்ள சா‌தனங்கள் பழுதடைந்தன. காஞ்சி - கடப்பேரி, பள்ளிக்கரணை, ‌படப்பையில் தலா ‌ 2 மின் கோபுரங்கள், சுங்குவார் சத்திரத்தில் 3 கோபுரங்கள் சரிந்து விழுந்‌தன. காக்களூர், காடுவெட்டி‌யில் தலா ஒரு கோபுரம், வீராபுரம்,‌ நெமிலி பகுதியில் 3 கோபுரங்கள் சேதமடைந்துள்ளதாக மின் வாரிய‌ம் தெரிவித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குள் மின்சார‌ம்‌ விநியோகிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாக பேசிய அவர், மின் கட்டணத்தை செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close