[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

வர்தா புயல் பாதிப்பு... மின் கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

the-intensity-of-electric-poles

சென்னை‌, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்மைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் வர்தா புயல் பாதிப்பு காரணமாக சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சீரமைக்க தேவையான மின் கம்பிகள், மின்மாற்றிகள், திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டுள்ளன. சீரமைப்பு பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும், சென்னையில் ஓரிரு நாட்களில் அனைத்து பணிகளும் முடிந்து விடும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சென்னையில் பல்வேறு பகுதிகளில் புயலினால் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் சாலைகளில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்கிறது. நேற்றிரவு எட்டு பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 35 டிப்பர் லாரிகள் ‌உதவியுடன்,‌ 200க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணியில் மாநகர காவல் துறையினரும் ஈடுபட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close