[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோயில்... 'புரட்சி தலைவி அம்மா ஆலயம்'...!

temple-for-the-late-cm-jayalalithaa

தஞ்சையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அதிமுக பிரமுகர் தனது சொந்த செலவில் கோவில் கட்டியுள்ளார்.

கடந்த 5-ம் தேதி இரவு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததை அடுத்து மாநிலம் முழுவதிலும் அதிமுக தொண்டர்கள் மவுன ஊர்வலம், மொட்டை அடித்தல் போன்ற வகையில் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை மாநகர முன்னாள் கொரடாவும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான சாமிநாதன் தனது சொந்த செலவில் முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘புரட்சி தலைவி அம்மா ஆலயம்’ என்ற கோவிலை கட்டி உள்ளார். விரைவில் 1000 பேருக்கு அன்னதானம் அளித்து வழிபாட்டிற்கு திறக்க உள்ளதாகவும், இங்கு ஜெயலலிதா, எம்ஜிஆர் அண்ணா பிறந்த நாள் நினைவு நாள்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு வழிப்பாடு செய்யப்போவதாவும் தெரிவித்த்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close