[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

மின்சாரம் இன்றி சென்னையில் ஏ.டி.எம் சேவை கடுமையாக பாதிப்பு...!

atm-services-damages-for-storm

சில்லறை தட்டுப்பாட்டை மெல்ல சமாளித்து கொண்டிருக்கும் மக்களுக்கு வர்தா புயல் மீண்டும் ஒரு தத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வர்தா புயலால் மீண்டும் மூடிக்கிடக்கும் ஏடிஎம்களை எதிர்நோக்கும் சூழல்‌ உருவாகியுள்ளது.

வர்தா புயல் காரணமாக ஏ.டி.எம். சேவைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. மின்னனு பணப்பரிமாற்‌றத்தை அரசு ஊக்குவிப்பதாக கூறினாலும், வர்தா புயலுக்குப் பின்பு பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வழக்கமாக குளிரூட்டிகளுடன் வரவேற்கும் ஏடிஎம் மையங்கள் தற்போது அவுட் ஆப் சர்வீஸ் என்ற பலகையுடனேயே வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன. வர்தா புயலால் மின் துண்டிப்பு ஏற்பட்டு சென்னை ‌நகரமே இருள் சூழ்ந்திருக்கும் நிலையில்‌, ஏ.டி.எம்களும் செயல்படாமல் உள்ளன.

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கார்டு ஸ்வைப்பிங் முறையை மட்டுமே நம்பியிருந்த வாடிக்கையாளர்கள் மின் இணைப்பு இன்றி ஸ்வைப்பிங் மெசின்களும் இயங்காததால் கடும் அவதிக்குள்ளாயினர். ஒரு புறம் புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகர மக்கள் மறுபுறம் பணத் தட்டுப்பாடு காரணமாக பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில், வர்தா புயலால் மக்களின் வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. இதனால் சென்னைக்கு மட்டுமாவது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close