[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

பிறந்த குழந்தை ஒரு மணி நேரத்தில் இறப்பு... மருத்துவர் இல்லாததால் நிகழ்ந்த அவலம்

born-baby-death-in-one-hour

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர் இல்லாத காரணத்தால், பிரசவத்தின் போது குழந்தை இறந்ததாக புகார் எழுந்துள்ளது.

பச்சனம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி சந்தியா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.‌ அப்போது அங்கு ஒரு நர்ஸ் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே இருந்துள்ளனர்.

இரவு நேர மருத்துவர் இல்லாத நிலையில், சுகப்பிரசவமாகி சந்தியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஒரு மணி நேரத்தில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து இறந்து விட்டதாகவும், யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்துவிடுமாறு அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது. மேலும், குழந்தையின் பெற்றோரிடம் ஊழியர்கள் வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close