[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

'தகவல் தொடர்பை சரிசெய்க'..... தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

cell-phone-towers-was-dead

தகவல் தொடர்பு சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வர்தா புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செல்ஃபோன் கோபுரங்கள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்களின் தகவல்தொடர்பு முடங்கி உள்ளது.

சென்னை எழிலகத்தில் தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகளுடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆலோசனை நடத்தினார். BSNL, AIRTEL, AIRCEL, VODAFONE உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், கூட்டத்தில் பங்கேற்றனர். வர்தா புயல் பாதிப்புகளை சரி செய்து, இன்றைக்குள் இணைப்புகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டது. தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close