[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

புயல் புரட்டிப் போட்ட தனியார் பேருந்து... உயிருக்கு போராடிய ஊழியர்கள் பத்திரமாக மீட்பு

storm-overturned-bus-safely-rescue-workers-fought-for-their-lives

சென்னை சிறுசேரியில், தனியார் பேருந்து ஒன்றை வர்தா புயல் புரட்டிப் போட்டது.

வர்தா புயல் சென்னையை வாரிச் சுருட்டிக்கொண்டிருந்த நேரத்தில், சிறுசேரி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றை பாதுகாப்பான இடத்தி‌ல் நிறுத்தி வைக்க ஓட்டுநர் முயற்சி செய்தார். பேருந்தை வணிக வளாகம் ஒன்றின் உள்ளே கொண்டுவர ஓட்டுநர் முயற்சித்த போது வீசிய சூறைக் காற்றில் பேருந்து ஒரு பக்கமாக சாயத் தொடங்கியது. அதனை உணர்ந்த ஓட்டுநர் பேருந்தை கட்டடத்தினுள் கொண்டு செல்ல முயற்சித்தார். இருப்பினும் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பேருந்து கவிழ்ந்தது.

பேருந்து கீழே விழுந்ததால் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உயிருக்கு ஆபத்து நேரப்போகிறது என்பதை உணர்ந்த ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு பேருந்திலிருந்து தப்பிக்க முயன்றனர். காற்று பலமாக வீசியதால் ஊழியர்கள் காற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்ட அருகில் இருந்தவர் கயிறு கட்டி, பேருந்தில் இருந்த ஊழியர்களை மீட்க பெரு முயற்சி மேற்கொண்டனர். அத்துடன் பேருந்தும் பத்திரமாக மீட்கப்பட்டது.

கண் இமைக்கும் நேரத்தில் உயிரையும் துச்சமாக மதிக்காமல் சகமனிதர்களை மீட்கும் மனிதாபிமானத்தின் வெளிப்பாடாகியுள்ளது இந்தக் காட்சி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close