[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

சீரமைப்புப் பணிகளில் சென்னை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து செயல்படுங்கள்: ஸ்டாலின்

chennai-corporation-act-in-conjunction-with-the-staff-of-overhauls-stalin

சீரமைப்பு பணியில் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறவும் புயல் பாதித்த இடங்களை நேரில் கண்டறியவும் கொளத்தூர் தொகுதிக்கு காரில் சென்றார். காரில் செல்ல முடியாத இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட அவர், சாய்ந்த மரங்களை அகற்றும் பணி மற்றும் இடிந்த வீடுகளை புனரமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வர்தா புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலின் பாதிப்பால் 10 பேருக்கு மேல் உயிரிழந்து இருப்பதாக தேசிய பேரிடர் அமைப்பு தெரிவிக்கிறது. இதுவரை மொத்தம் 20,000 மரங்கள், மற்றும் 3,000 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன எனத் தெரிவித்தார்.

தொற்று நோய் பரவாமல் தடுக்க தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை அமைக்கவும், பொதுமக்களுக்கு குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென வலியுறுத்திய ஸ்டாலின், மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திமுகவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close