[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

வர்தா புயலால் 10 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்

varta-storm-damaged-10-thousand-electricity-post

வர்தா புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகவும் இன்று நள்ளிரவுக்குள் சென்னை நகரம் முழுவதும் மின் விநியோகம் சீர் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை தாக்கிய வர்தா புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 10,000 மின் கம்பங்கள், 24 உயர் மின் அழுத்த கோபுரங்கள் சேதமடைந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் சென்னையை சேர்ந்த 6,000 பேர் ஈடுபட்டுள்ளதாகவும்.இன்று நள்ளிரவுக்குள் சென்னை நகருக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் எனவும். சென்னை புறநகர் பகுதிகளுக்கு 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கே.கே.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், உயர்நீதிமன்றம், மாம்பாக்கம், கோயம்பேடு, எம்எம்டிஏ ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close