[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்துங்கள் : முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

chief-minister-pannerselvam-advice-officers-for-speed-renovation-works

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று கோரத் தாண்டவம் ஆடிய புயலால் மரங்கள் ஆங்காங்கே சரிந்து விழுந்துள்ளன. அவற்றை சரிசெய்யும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மின்சார விநியோகமும் இன்னும் தொடங்கவில்லை.

இந்நிலையில், புயல் பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் மற்றும் பல்வேறு துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வர்தா புயல் விளைவித்த சேதங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்புப் பணிகளை விரைவுடுத்துமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

இதனிடையே முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம், ஆளுநர் வித்யாசாகர் ராவ் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது முதலமைச்சர் சீரமைப்பு பணிகள் குறித்து ஆளுநரிடம் விளக்கம் அளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close