[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

போர்க்கால நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

vardha-cyclone-mk-stalin-demand-war-time-measures

வர்தா புயலால் இன்னலுக்கு ஆளாகியுள்ள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

வர்தா புயல் மற்றும் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பாதுகாப்பு காரணங்களுக்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து அந்தந்த பகுதிகளில் உள்ள திமுக-வினர் தேவைப்படும் உதவிகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணிகளில் உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ள சூழ்நிலையில் மின்சாரம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகள் விரைவில் கிடைத்து இயல்பு நிலை திரும்ப தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close