[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

மின்சாரம் வழங்கப்பட்டவுடன் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன..?!

electricity-board-advice-to-people

மழைநீர் வடிந்த பிறகு மின்சாரம் வழங்கப்படும் பகுதிகளில், பொதுமக்கள் மின் விபத்துகளை தவிர்க்க எடுக்கவேண்டி‌ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்‌நாடு மி‌ன் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,

1) மழைநீர் சூழ்ந்த வீடுகளில், தண்ணீர் முழுவதுமாக வடிந்த பிறகு எலக்டீரிசியனை அழைத்து மின்சார ஒயர்கள் செல்லும் மின்பாதைகளை பரிசோதிக்க வேண்டும்.

2) வீடுகளில் உள்ள சுவர்கள் ஈரமாக இருந்தால் சுவர்களைத் தொட வேண்டாம் என்றும், உடனடியாக எலக்டீரிசியனை அழைத்து முழுவதுமாக சரிபார்த்த பின்னரே மெயின் சுவிட்சை ஆன் செய்ய வேண்டும்.

3) மழைநீரில் நனைந்த குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, துணி துவைக்கும் இயந்திரம், கணினி மற்றும் இதர மின்சாதனங்களை முழுவதும் உலர்ந்துள்ளதா என்று உறுதி செய்யாமல் தொட வேண்டாம்.

4) மின்கம்பங்கள், பில்லர் பெட்டிகள், தெரு விளக்கு மின்சார கம்பங்கள் ஆகியவை அருகில் செல்ல வேண்டாம்.

5) மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் மின்பொறி தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.

6) மின்கடத்திகள் அல்லது மின்கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் அளிக்கவும்.

7) மின்கம்பி மற்றும் மின்கம்பங்களில் ஈரத்துணியை உலர்த்த வேண்டாம்.

8) வளர்ப்புப் பிராணிகளை மின்கம்பங்களில் கட்ட வேண்டாம்.

9) ஈரமான மின்சார மீட்டர்கள், மின்சாரப் பலகைகள், சுவிட்சுகள் மற்றும் மின்சார ஒயர்களை தொட வேண்டாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close