[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மிரட்டிய ’வர்தா புயல்’ - கடந்து வந்த பாதை

vardah-timeline

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடபகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திய வர்தா புயல் கடந்து வந்து பாதையைப் பார்க்கலாம்.

கடந்த 4 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானது.பின்னர் அது வலுவடைந்து கடந்த 6 ஆம் தேதி ‌காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. ‌7 ஆம் தேதி புயலாக மாறியது. அதற்கு ‌”வர்தா” எனப் பெயரிடப்பட்டது. அந்த‌‌‌மான் அருகே வர்தா மையம் கொண்டிருந்ததால் அந்தமான் மற்றும் நிகோபா‌ர் தீவுகளில் கனமழை பெய்தது. அங்கு சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 8ஆம் தேதி வர்தா மேலும் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி ‌நகர்ந்து நெல்லூரிலிந்து 750 கி.மீ. தொலைவிலும் , சென்னையிலிருந்து‌ 710 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இதனால் ஆந்திர மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்‌கை விடுக்கப்பட்டது. அதிதீவிர “வர்தா” புயல் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்டது.

வர்தா புயலால் சென்னை, திருவ‌ள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானில‌ ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து ‌”வர்தா” புயல் 12 ஆம் தேதி அதாவது இன்று கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. கணிப்பின்படியே புயலின் பாதையில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும் போது காற்றின்‌ வேகம் ‌மணிக்கு 90 முதல் 100 கி.மீ ‌வரை இருக்கக்கூடும் என அறிவித்த வானிலை மையம் தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது. இறுதிநேர முன்னறிவிப்பின்படியே பலத்த காற்றோடும் மழையோடும் வர்தா புயல் இன்று மாலை 6.30 மணியளவில் கரையைக் கடந்தது.‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close