[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

சென்னையை புரட்டிப் போட்ட வர்தா..! (வீடியோ)

vardha-cyclone-in-chennai

வர்தா புயலின் கோரத் தாண்டவத்திற்கு சாட்சி சொல்லும் காட்சிகள்...

வங்கக் கடலில் கடந்த 7-ந்தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாக உருவானது. ‘வர்தா’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.

இந்நிலையில் இந்த அதிதீவிர வர்தா புயலின் மையப்பகுதி சென்னை துறைமுகம் அருகே 3.30 மணியளவில் கரையை கடந்தது. அப்போது 192 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இதனிடையே வர்தா புயல் முழுவதுமாக மாலை 6.30 மணிக்கு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இரவு 7 மணி வரை வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close