[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

மின் விபத்துக்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

awarness-for-electrical-accident

மழைநீர் வடிந்த பிறகு மின்சாரம் வழங்கப்பட்ட பகுதிகளில், மின் விபத்துக்களைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்‌நாடு மி‌ன் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்செய்திக்குறிப்பு தெரிவித்துள்ள முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்:

* மழைநீரில் நனைந்த குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், கணினி மற்றும் இதர மின்சாதனங்களை முழுவதும் உலர்ந்துள்ளதா என்று உறுதி செய்யாமல் தொட வேண்டாம்.

* அருகிலுள்ள எலக்ட்ரீசியனை வரவழைத்து முழுவதுமாக பரிசோதித்த பிறகு நனைந்த மின் உபகரணங்களை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

* ஈரமான மின்சார மீட்டர்கள், மின்சார பலகைகள், சுவிட்சுகள் மற்றும் மின் ஒயர்களை தொடக்கூடாது.

* மழைநீர் சூழ்ந்த வீடுகளில், தண்ணீர் முழுவதுமாக வடிந்த பிறகு எலக்டீரிசியனை அழைத்து மின் ஒயர்கள் செல்லும் மின்பாதைகளை பரிசோதிக்க வேண்டும்.

* ஈரமான சுவர்களை தொட வேண்டாம். உடனடியாக எலக்டீரிசியனை அழைத்து முழுவதுமாக சரிபார்த்த பின்னரே மெயின் சுவிட்சை ஆன் செய்ய வேண்டும்.

* மின்கம்பங்கள், பில்லர் பெட்டிகள், தெரு விளக்கு மின்சார கம்பங்கள் ஆகியவற்றை தொடக்கூடாது.

* மின்கம்பி மற்றும் மின்கம்பங்களில் ஈரத்துணியை உலர்த்த வேண்டாம். வளர்ப்புப் பிராணிகளை மின்கம்பங்களில் கட்ட வேண்டாம்.

* மின்கடத்திகள் அல்லது மின்கம்பிகள் அறுந்து விழுந்திருந்தாலோ மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் மின்பொறி தென்பட்டாலோ உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close