[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

புயலின் தாக்கத்தை சமாளிக்க 100 நடமாடும் மருத்துவக் குழுக்கள்

100-medical-teams-arranged-with-the-impact-of-the-storm

முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக 100 நடமாடும் மருத்துவகுழுக்களும், 50 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வர்தா புயலை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக 100 நடமாடும் மருத்துவகுழுக்களும், 50 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுக்களையும் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 பூச்சியல் வல்லுநர்களும், சுகாதார ஆய்வாளர்களும் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நூற்றிப் பதின்மூன்று 108 அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் விழும் மரங்களை அப்புறபடுத்தி போக்குவரத்து பாதிப்பைச் சரி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவசர ஊர்தி சேவையுடன் ஏனைய காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளின் ஒருங்கிணைப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு, அவசர சிகிச்சை அளிக்க மருந்து, மாத்திரைககளும், பாம்புகடிக்கான மருந்துகளும் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

புயல், மழைக்குப்பின், தண்ணீரால் பரவும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளும் போதிய அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் கையிருப்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close