[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

அதிதீவிர வர்தா புயல் மாலை 5.30 மணிக்கு வலுவிழக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்

vardha-strom-will-weaken-in-evening

அதிதீவிர வர்தா புயல் மாலை 5.30 மணிக்கு வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த 7-ந்தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாக உருவானது. ‘வர்தா’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.

இந்நிலையில் அதிதீவிர வர்தா புயலின் மையப்பகுதி சென்னைக்கு வடக்கே தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் மணிக்கு 192 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. 600-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ள நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதி தீவிர வர்தா புயல் மாலை 5.30 மணியளவில் புயலாக வலுவிழக்கும் எனக் கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றிரவு 11.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

சென்னையில் பலத்த காற்றுடன் மழையும் கொட்டித் தீர்த்து வருவதால் மறு அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெளியே சென்றவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காமராஜர், ராஜாஜி, பெசன்ட் நகர், ஈசிஆர் சாலைகளில் பயணிக்க வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்கள், விமானங்கள் ரத்து

சென்னை புறநகர் பகுதியில் இயங்கும் அனைத்து மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்திலும் மாலை 6 மணி வரை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close