[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

வர்தா புயல்.. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை

vardha-cyclone-tn-cm-o-pannerselvam-discussion-with-officers

வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து வரும் நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் வடக்கு தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே, சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதனால் கடுமையாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இக்கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மழையால் வரும் பாதிப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், உடனடியாக அந்த இடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close