[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

வர்தா புயல்... சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்

vardah-strom-train-time-chenged

வர்தா புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்க கடலில் உருவாகிய வர்தா புயல் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வர்தா புயல் காரணமாக சென்னையில் ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் சூளூர்பேட்டையிலிருந்து புறப்படும் சூளூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லூரில் இருந்து சூளூர்பேட்டை செல்லும் ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதே போன்று சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்லும் ரயில் கூடூர் வரை மட்டுமே இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவை எந்த மாற்றமின்றி, வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close