[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு
  • BREAKING-NEWS மாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் - வைகோ
  • BREAKING-NEWS பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன்

’பெரிய ஆத்மா மகாத்மாவாகிவிட்டது’: ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

rajini-pays-tribute-to-jayalalithaa

ஜெயலலிதா எனும் பெரிய ஆத்மா, மகாத்மாவாகிவிட்டதாக நடிகர் சங்க அஞ்சலி நிகழ்வில் ரஜினிகாந்த் பேசினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி ஆகியோருக்கு நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள், மூத்த நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மறைந்த ஜெயலலிதா மற்றும் சோ ஆகியோரின் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நிறைவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொதுவாழ்வில் வைரம் போன்றவர் என்று புகழாரம் சூட்டினார். போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்டவர் ஜெயலலிதா என குறிப்பிட்ட ரஜினி, ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் தனது முயற்சியால் முன்னுக்கு வந்தவர் என்றும் குறிப்பிட்டார். பொதுவாழ்க்கைக்காகத் தனது சொந்த வாழ்க்கையே தியாகம் செய்தவர் ஜெயலலிதா என்றும் ரஜினி பேசினார். சோ ராமசாமியும், ஜெயலலிதாவும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தவர்கள் என்றும் ரஜினி குறிப்பிட்டார். நிகழ்ச்சியின் இறுதியாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சோவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close