[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

’மிரட்டும் வர்தா புயல்’.. பொதுமக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

vardah-cyclone-precaution-measures

சென்னைக்கு மிகமிக அருகில் வர்தா புயல் கரையை கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க பொதுமக்களுக்கு வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது.

வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களின் இன்று மாலை முதலே கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் போதுமான குடிநீரை வைத்திருக்கவும், ரொட்டி, பழங்கள், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை தேவையான அளவு கையிருப்பில் வைக்கவும் தமிழக வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. ஏரி, குளம், ஆற்றுப் பகுதிகளி‌ல் வசிப்பவர்க‌ள்‌ பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றில் ஜன்னல்கள் உடைய வாய்ப்புள்ளதால் அவற்றை இருக்கமாக மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை நிலவரங்களை தொலைக்காட்சி மற்றும் ரேடியோவை கவனித்து தெரிந்துகொள்ளு‌மாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மின்கம்பிகள் அறுந்துவிழ வாய்ப்புகள் இருப்பதால்‌, நடந்து செல்வோர் கவனமுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close