[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

அதிமுக பொதுச்செ‌யலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்: தம்பிதுரை வலியுறுத்தல்

thambidurai-request-sasikala-to-take-charge-of-aiadmk-general-secretary

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவரான தம்பிதுரை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவி‌ன் அரசியல் வாரிசு சசிகாலாதான் என்பதை, அதிமுக தொண்டர்கள் நன்கறிவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை வழிநடத்தும் தகுதியும் அனுபவமும் அறிவும் பெற்றவர் சசிகலா மட்டும்தான் என கூறியுள்ள அவர், தேர்தல் போன்ற சமயங்களில் சசிகலாவின் ஆலோசனையை பெற்று செயல்படுமாறு ஜெயலலிதாவே தம்மை போன்ற நிர்வாகிகளிடம் பணித்ததாகவும் தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார். கொள்கை ‌பரப்புச் செயலாளர் என்ற முறையில் சசிகலா தமக்கு ஏற்கனவே பல வழிகாட்டுதல்களை அளித்துள்ளார் என்றும் தம்பிதுரை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என முதலமைச்சரும், அ.தி.மு.க பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வமும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close