[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க அம்மா பேரவை தீர்மானம்

aiadmk-general-secretary-shashikala-amma-peravai-resolution

அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பதவியேற்க வேண்டும் என அம்மா பேரவை சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமாக பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி காலமானார். அவரின் மறைவை அடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். எனவே அதிமுக பொதுச்செயலாளராக யார் பொறுப்பேற்பார் என கேள்வி எழுந்தது.

இதனிடையே பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியானவர் சசிகலாதான் என அதிமுக நிர்வாகிகள் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க வேண்டும் என அம்மா பேரவை சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை மெரினா கடற்கரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close