[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

டிச.23-ல் அந்தோணியார் ஆலய ஒப்படைப்பு விழா..!

st-antony-s-church-dedication-ceremony

கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயத்தை யாழ் மறைமாவட்ட ஆயரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டு தோறும் இரு நாட்டு பக்தர்களும் இணைந்து கொண்டாடும் விழாவாக இருந்து வருகிறது. இந்தத் தேவாலயம் மிகவும் பழைமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்ததால், அதற்கு அருகில் புதிதாக மற்றொரு அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் திறப்பு விழா கடந்த 7-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆலய திறப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை கடற்படை நிதியுதவியுடன் கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் 23-ம் தேதி நடைபெறும் விழாவில் யாழ் மறை மாவட்ட ஆயரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த விழாவில் மத்திய அரசு அனுமதித்த சேசுராஜ், எமரால்டு, அந்தோணி, ராஜேந்திரன், ராயப்பன், சந்தியாகு சிங்கம் மற்றும் பங்குத்தந்தையர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கிறார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close