[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் விடிய விடிய சோதனை... பல கோடி ரூபாய் சிக்கியது

sekarreddy-s-velore-house-it-raid

வேலூரில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு விடிய விடிய நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பணம், தங்கம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த விருதம்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை 6 மணியளவில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய சுமார் 12 மணிநேரம் நீடித்த இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், தங்கம், ஆவணங்கள் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சேகர் ரெட்டியின் மனைவி ஜெயஸ்ரீயிடம் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சென்னையிலும் சேகர் ரெட்டிக்கு சொந்தமான 3 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக தொடரும் வருமான வரித்துறையினரின் சோதனையில், இதுவரை 131 கோடி ரூபாய் ரொக்கம், 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close