[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

tamilnadu-cabinet-meet-ends

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது.

காலை 11.30 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு 13 பக்க இரங்கல் தீர்மானம் வாசித்த பின் கூட்டம் தொடங்கப்பட்டது. அமைச்சர்கள் அனைவரும் மவுன அஞ்சலி‌ செலுத்தியதை‌ தொடர்ந்து கூட்டம் சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்களின் அலுவலக அறைகளுக்குச் சென்று அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் மீண்டும் தொடங்கிய கூட்டத்தில், ஜி.எஸ்.டி மசோதா தொடர்பாகவும், தமிழக வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் கூட்டம் முடிந்தது. அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா நினைவில்லம், காவிரி மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்துடன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மறைந்த முதலமைச்சரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close