[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

'மக்கள் மனதில் ஜெயலலிதா என்றும் நிலைத்திருப்பார்': நல்லகண்ணு புகழாரம்

jayalalithaa-will-remain-in-the-minds-of-people-nallakkannu-tribute

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இழப்பு இந்தியாவிற்கே பேரிழப்பு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மெரீனா கடற்கரையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு மற்றும் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பிறகு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவவை நேரில் சந்தித்து அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு ஜெயலலிதாவின் இறப்பு இந்தியாவிற்கே பேரிழப்பு என்றும் அவருடைய ஆளுமையும் பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவர் செய்த பணிகளும் மக்கள் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும் எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close