[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி இருக்காது: பொன்னையன் விளக்கம்

ponnaiyan-about-admk-general-secretary

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு அனேகமாக போட்டி இருக்காது எனவும் பொதுச் செயலாளர் ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி நிலவுகிறது என்று பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தி எனவும் விரைவில் தொண்டர்களை காக்கும் ஒருவர் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தெரிவித்தார்.

அதிமுக-வில் வெற்றிடம் என்பது எதுவும் உருவாகவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பாஜக அதிமுக-விற்கு நெருக்கடி தருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை எனவும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close